Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருமண புகைப்படத்தை தராமல் ஏமாற்றிய ஸ்டுடியோ! ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

09:22 AM Jul 17, 2024 IST | Web Editor
Advertisement

கோவையில் திருமணத்திற்கு எடுத்த புகைப்படம், வீடியோக்களை பணத்தைப்
பெற்றுக் கொண்டு தராமல் ஏமாற்றிய ஸ்டுடியோ நிர்வாகத்திற்கு ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்க கோவை மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கோவை சிவானந்தபுரத்தைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் கடந்த 2022ம் ஆண்டு
செப்டம்பர் மாதம் நடந்த தனது மகளின் திருமணம் மற்றும் வரவேற்பு
நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க, கிராஸ்கட் சாலையில்
உள்ள நாட் போட்டோகிராபி ஸ்டுடியோவை அணுகினார். இதற்கு ஒன்றரை லட்சம் செலவாகும் என நிறுவனம் கூறிய நிலையில் 1.35 லட்சம் ரூபாயை மயில்சாமி மற்றும் அவரது மகள் இந்துமதி வழங்கினர்.

அந்த ஸ்டுடியோ நிறுவனம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்தாலும், பணத்தைப் பெற்றுக் கொண்டு அவற்றை கடந்த 2023 டிசம்பர் வரை ஒப்படைக்கவில்லை. மேலும் நிறுவனத்தின் முகவரியை மாற்றியதால், அவதிக்குள்ளாக மயில்சாமி  இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக புதிய முகவரியை தெரிந்து கொண்டு, திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கேட்டுள்ளார். ஆனால் புகைப்பட நிறுவனம் அவற்றைத் தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்த நிலையில் மயில்சாமி மற்றும் அவரது மகள், மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதையும் படியுங்கள் : மொஹரம் பண்டிகை : ராணிப்பேட்டை அருகே இஸ்லாமியர்கள் தீயில் இறங்கி நேர்த்திக்கடன்!

இது தொடர்பாக ஆணையத் தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து மற்றும் சுகுணா ஆகியோர் அடங்கிய குழு விசாரணை நடத்தினர். புகைப்பட நிறுவனம்
மற்றும் மேலாளர் தங்கள் கடமையை நிறைவேற்றத் தவறினார்கள் என்றும், அவர்கள்
கவனக்குறைவாக நடந்து கொண்டார்கள் என்றும் தெளிவாகத் தெரிந்தது என்று கூறினர்.

மேலும், "எந்தவித நியாயமும் இல்லாமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்காதது சேவையில் குறைபாடு" என குறிப்பிட்டுள்ள ஆணையம், ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் அந்த நிறுவன மேலாளருக்கு, மயில்சாமி மற்றும் இந்துமதியால் செலுத்தப்பட்ட ரூ.1.35 லட்சத்தை 9% வட்டி விகிதத்துடன் திருமண விழாவின் தேதியிலிருந்து திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், இருவரும் மனுதாரர்களுக்கு ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், சட்டச் செலவுகளுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

Tags :
cheatingCoimbatoreCompensationConsumer Commissionstudio managementvideosWedding photos
Advertisement
Next Article