#WeatherUpdate | இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 4-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில், தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதையும் படியுங்கள் : #Pakistan-ல் பேருந்து கவிழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு!
சென்னையில் மழை பெய்வது குறைந்து வெயில் வாட்டி வருகிறது. இருப்பினும் இரவு நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.