For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#WeatherUpdate | மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

11:20 AM Nov 02, 2024 IST | Web Editor
 weatherupdate   மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
Advertisement

தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (நவ.2) முதல் நவ.7-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடைய, இன்று காலை சென்னையில் பல இடங்களில் லேசான முதல் மிதமாக மழை பெய்தது.

இதையும் படியுங்கள் : #Serbia | ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விபத்து – 13 பேர் பலி!

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுரி ஆகிய மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement