Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#WeatherUpdate | அடுத்த 2 மணி நேரத்திற்கு கொட்டப்போகும் மழை... எங்கெல்லாம் தெரியுமா?

01:31 PM Nov 08, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை தொடங்கி திருப்பத்தூர் வரையிலும், வங்கக்கடல் ஓரத்தில் தஞ்சாவூர் வரையிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் நவ.14ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமாநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Next Article