Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#WeatherUpdate | அடுத்த 2 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!

11:06 AM Nov 05, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.தமிழ்நாட்டில் நவ.9 ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படியுங்கள் : #GoldRate | தங்கம் விலை குறைவு… இன்றைய விலை நிலவரம் என்ன?

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Next Article