#WeatherUpdate | இரவு 7 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளுக்கு அருகே தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்து. பொங்கல் பண்டிகையான நாளை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 18 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இரவு 7 மணி வரை லேசான மழைக்கு வாயப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.