#WeatherUpdate | நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முதல் லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் பருவமழை மேலும் தீவிரமடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல இன்று மேலடுக்கு சுழற்சி உருவாகும். தொடர்ந்து நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாளை மறுநாள் முதல் (டிச.16), 18-ம் தேதி வரை தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் அதிகனமழை முதல் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.