#WeatherUpdate | வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் வடமேற்கு வங்கக்கரை வடக்கு ஆந்திர தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நிலவி வருகிறது.
தமிழகத்தில் இன்று முதல் வருகிற 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வங்கக்கடலில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இதனால் வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஓரினங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நேற்று சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.
அதே சமயத்தில் மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலையும் நீடித்தது. மேலும் வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் வருகிற 29ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.