Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
01:13 PM Dec 11, 2025 IST | Web Editor
பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
Advertisement

பாரதியாரின் 144ஆவது பிறந்தநாள் இன்று (டிச.11) கொண்டாடப்படுகிறது. பாரதியாரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

"திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்; தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் எனப் பாடிப் பெண்களின் உயர்வை வலியுறுத்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்! நமது திடாவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்ததுமே பாட்டுக்கொரு புலவன் பாரதி மறைவெய்திய நூற்றாண்டினையொட்டி அவரது புகழ் பரப்பும் 14 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுச் செயல்படுத்தி வருகிறோம்.

பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் நமது அரசின் திட்டத்துக்குப் பாரதியின் கவிதையில் இருந்தே புதுமைப்பெண் எனப் பெயரிட்டோம். பாரதியாரின் நினைவுநாளினை "மகாகவி நாள்" எனக் கடைப்பிடிக்கவும் அறிவிப்பு செய்தோம். சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்!"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
bharathiyarBirthdayCMO TAMIL NADUDMKMK StalinSubramania BharatiTN Govt
Advertisement
Next Article