"கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டி தாண்டி பதிவாகிறது. மதிய வேளையில் வெளியே செல்லும் பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கட்டடங்களுக்கு வெளியே வேலை பார்ப்பவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் மதிய வேளையில் வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கையாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடித்து கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்! pic.twitter.com/D5uxspMi0Q
— M.K.Stalin (@mkstalin) March 31, 2025
வெயிலின் தாக்கத்தால் குளம், குட்டைகளில் உள்ள நீர் வற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அதனை நம்பியுள்ள பறவைகள் அருந்த நீர் இல்லாமல் தவிக்கும் நிலையும் உருவாகலாம். கடும் வெயிலினால், மனிதர்களைப் போலவே பறவை, விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பறவைகளுக்கு நீர், உணவு வழங்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும், "கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்" என தெரிவித்துள்ளார்.