Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தேர்தலில் போட்டியிட அதிக இடங்களுக்காக அணி மாறமாட்டோம்" - விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்!

2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட அதிக இடங்களுக்காக அணி மாறமாட்டோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
07:57 AM Mar 17, 2025 IST | Web Editor
Advertisement

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேர்தல் அங்கீகார பெருவிழா பொதுக்கூட்டம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசுகையில்,

Advertisement

"நடிகர்கள் கட்சி தொடங்கினால் விசிக பலவீனமடையும் என ஊடகங்ளில் எழுதுவார்கள். தேமுதிக தொடங்கப்பட்ட போது விசிக பலவீனமடையும் என எழுதினார்கள். விசிகாவை சேதப்படுத்த முடியாது. நம்முடைய கொள்கை, களம் புதியது. சினிமா கவர்ச்சியின் மூலமாக இளைஞர்களை திசைத்திருப்பி, மடை மாற்ற முடியாது.

அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் கொள்கையால் உள்வாங்கி இளைஞர்களை மடைமாற்ற முடியாது. கொள்கை அளவில் பன்பட்ட இயக்கமாக விசிக உள்ளது. அதனால் தான் பல கட்சி தலைவர்கள் வாழ்த்தி அங்கீகரித்துள்ளனர். கொள்கை பிடிப்புள்ள இளைஞர்களை அனிதிரட்ட களத்தில இறங்கினேன். தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஆவோம் என வரவில்லை. 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் கலத்தில் தாக்கு பிடிக்கிறோம் அது தான் வெற்றி.

தேர்தல் ஆனையத்தில் அங்கீகாரம் வெற்றி அல்ல. எந்த பின்புலமும் இல்லாமல் கால்நூற்றாண்டுக்கு தாக்கு பிடிக்கிறோம் அது தான் வெற்றி. இளைஞர் ஆதரவு இல்லை என்றால் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தொடங்கப்பட்ட கட்சிகள் தனித்து நின்று வாக்கு சதவீதத்தை நிருபித்த பின்னர் தான் கூட்டணி வைப்பார்கள். வாக்கு வங்கியை உறுதிப்படுத்தாமல் கூட்டணி வைத்துள்ளோம். இது ஒரு சாதிக்கான கட்சி அல்ல. விசிக நம்மோடு இருந்தால் தான் வாக்கு நமக்கு வருகிறது என்ற காரணத்தால் கூட்டணி வைக்கிறார்கள்.

ஒரு தேர்தலில்கூட் நிற்கவில்லை, ஆனால் அடுத்த முதல்வர் என ஊடகங்களில் எழுதுகிறார்கள். நான் நடிகராக இருந்திருந்தால், தலித் அல்லாதவராக இருந்திருந்தால் அடுத்த முதல்வர் என எழுதியிருப்பார். இன்றைக்கும் நமக்கு அரசியலில் பேரம் பேச தெரியவில்லை. பேரம் முக்கியமல்ல, மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே முக்கியம். வகுப்புவாத சக்திகள் தலைதூக்காமல். சாதி, மத வெறியர்கள் கொட்டமடிக்ககூடாது என்பது தான் நம் சிந்தனை. அதன் அடிப்படையில் தான் இப்போதும் முடிவு எடுக்கிறோம்.

இந்த அங்கீகாரத்தை தக்க வைக்க வேண்டும். இன்றைக்கு தமிழ்நாட்டில் பல கட்சிகளுக்கு அங்கிகாரம் இல்லை. அனைத்து தரப்பு மக்களும் விசிகவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நான்கு தொகுதிகளில் பெற்ற வெற்றி. அதில் இரண்டு பொதுத்தொகுதி. 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூடுதலான இடங்களிலும் போட்டியிட வேண்டும் என கேட்டுப்பெற முயற்சிப்போம். ஆனால் அதிக இடங்களுக்காக கூட்டணிக்காக அணி மாறுவோம் என நினைக்க்கூடாது.

பெரியார் கொள்கயை பின்பற்றும் திமுக ஆட்சியில் இருக்கும்போதே சாதிய சக்திகளை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. திமுக அரசு அதனை ஒடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள் அதனையும் நாம் உணர்கிறோம். இங்கு பாஜக, சங்பரிவார் கட்சியினர் ஆட்சிக்கு வந்துவிட்டால் பட்டியல் சமூக மக்களை நிலை என்னவாகும்.

தேர்தல் அரசியல் வேறு, திருமாவளவன் ஆட்சியில் இருந்தாலும் சாதிய வன்முறையை தடுக்க முடியாது. 24 மணி நேரத்தில் சட்டம் போட்டு தடுக்க முடியாது. ஒரு குற்றவாளி பரோலில் வருகிறான் அவனை கொண்டாடும் சமூகமாக உள்ளது. கூட்டணி என்பது என்னிக்கை அடிப்படையில் இல்லை. தமிழ்நாட்டை கொள்கை சார்ந்து வழிநடத்த வேண்டும், பாதுக்காக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால் எண்ணிக்கை பற்றி கவலைப்படுவதாக இல்லை. என்னை ஏமாற்றியதாக நினைக்கட்டும், நானும் ஏமாந்ததாக என்னிக்கொள்கிறேன். இந்த விசிக நாட்டை ஆள வேண்டும் என மக்கள் சொல்லும் காலம் வரும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
CONTESTCriticismDMKElectionthirumavalavanVilupuramVKC leader
Advertisement
Next Article