Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஜூன் 4-ல் வெற்றிக்கொடி ஏற்றுவோம்...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்!

12:28 PM May 26, 2024 IST | Web Editor
Advertisement

ஜுன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் எனவும், அந்த வெற்றியை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“2023 ஜூன் 3-ம் தேதி தொடங்கிய கருணாநிதியின் நூற்றாண்டு 2024 ஜூன் 3 அன்று நிறைவடையும் நிலையில், கடந்த ஓராண்டு முழுவதும் சாதனைத் திட்டங்களாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறோம்.

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு ஏறுதழுவுதல் அரங்கம், சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், சென்னை மெரினா கடற்கரையில் வரலாற்று ஆவணமாகக் கலைஞர் நினைவிடம் உள்ளிட்டவை கடந்த ஓராண்டில் நிறைவடைந்து கம்பீரமாக அமைந்துள்ளன.

திருத்தலங்கள் பல நிறைந்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்குச் செல்கின்ற தமிழ்நாட்டு மக்களின் புதிய திருத்தலமாகத் திருவாரூர் கலைஞர் கோட்டம் அமைந்துள்ளது. ஜூன் 3 முத்தமிழறிஞர் கருணாநிதி பிறந்தநாள். தேர்தல் நடத்தை முறைகளைக் கவனத்தில் கொண்டு, மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொரு மாவட்டக் கழகம் சார்பிலும், ஒன்றிய-நகர-பேரூர்-கிளைக் கழகங்கள் சார்பிலும் நடத்த வேண்டும்.

மக்கள் கூடும் இடங்களில் அவரின் திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு, அனைத்துக் கொடிக்கம்பங்களிலும் கொடிகளைப் புதுப்பித்துக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும். கழகத்தினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பாக 'கலைஞர் 100' என்ற வரியுடன் கோலமிட்டு பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும். உள்ளூர் மைதானங்களில் இளைஞர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

ஜூன்-4 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். ‘இந்தியா’ வின் வெற்றியைத் கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் நம் உயிர்நிகர் கருணாநிதி நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
கலைஞர்100BirthdayDMKIndiakalaignarkarunanithiMK Stalin
Advertisement
Next Article