Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இனிப்பு வழங்கிய சகோதரர் ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியை கொடுப்போம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

09:29 AM Apr 13, 2024 IST | Jeni
Advertisement

ஜூன் 4-ம் தேதி ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியை அளிப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. கட்சிகளின் தேசிய தலைவர்கள், மூத்த தலைவர்கள், பல்வேறு மாநிலங்களில் தங்களது கட்சி சார்பிலும், கூட்டணி சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கோவை செட்டிபாளையத்தில் I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காங். மூத்த தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார்.

இதையும் படியுங்கள் : தடுப்புகளை தாண்டிச் சென்று ‘அண்ணன்’ மு.க.ஸ்டாலினுக்கு ஸ்வீட் வாங்கிய ‘தம்பி’ ராகுல் காந்தி!

பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ராகுல் காந்தி, வரும் வழியில் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக ஸ்வீட் வாங்கினார். பின்னர் அதனை பொதுக்கூட்டத்தில் தன்னை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி ராகுல் காந்தி அன்பைப் பரிமாறிக் கொண்டார். இது தொடர்பான வீடியோவை காங். கட்சியும், ராகுல் காந்தியும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த இனிமையான செய்கையால் தான் மிகவும் நெகிழ்ச்சிக்குள்ளானதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X தள பக்கத்தில், “அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்! என்னுடைய சகோதரர் ராகுல் காந்தியின் இந்த இனிப்பான செய்கை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 4-ம் தேதி அவருக்கு இனிப்பான வெற்றியை கொடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
CongressDMKElection2024Elections2024ElectionswithNews7tamilMKStalinRahulGandhi
Advertisement
Next Article