Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அடுத்த தேர்தலுக்குள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவோம்” - செல்வகணபதி எம்.பி. பேட்டி!

03:11 PM Mar 10, 2024 IST | Web Editor
Advertisement

“அடுத்த தேர்தலுக்குள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவோம்” என செல்வகணபதி எம்.பி தெரிவித்துள்ளார். 

Advertisement

புதுச்சேரி பாஜக மாநில தலைவரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு மத்திய பாஜக அரசு எந்த விதமான அழுத்தமும் கொடுக்கவில்லை. முதலமைச்சர் ரங்கசாமியின் கருத்தை கேட்டு தான் மக்களவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளரை தேர்வு செய்தோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பார். அடுத்த தேர்தலுக்குள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவோம்.

புதுச்சேரியில் 100 சதவீதம் வெற்றி வாய்ப்பு பா.ஜ.கவிற்க்கு தான். இதை செய்கிறோம், அதை செய்ய போகிறோம் என நாங்கள் ஓட்டு கேட்க போவதில்லை. தற்போது இடைக்கால பட்ஜெட்டில் கூட எந்த இலவசங்களையும் இந்த அரசு அறிவிக்கவில்லை. அதற்கு காரணம், என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி புதுச்சேரியில் செய்துள்ள சாதனைகளுக்காக மக்கள் நிச்சயம் எங்களுக்கு வாக்களிப்பார்கள். மேலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெரும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
BJPElection2024Narendra modiParlimentary ElectionPuducherrySelvaGanapathy MPstate status
Advertisement
Next Article