For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்" - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

04:58 PM Feb 29, 2024 IST | Web Editor
 உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்    ஓ பன்னீர்செல்வம் பேச்சு
Advertisement

நாங்கள் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

Advertisement

சென்னை எழும்பூரில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
தலைமையில்  அவரது ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து,  ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: 

"கூட்டணியில் எங்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது.  இந்திய திருநாடு
சுபிட்சையோடு இருக்க வேண்டும்.  அதற்கான காரியங்களை தொண்டர்கள் உரிமை மீட்பு
குழு செய்யும்.  பத்தாண்டு காலம் நரேந்திர மோடி இந்திய நாட்டின் பிரதமராக இருந்து பல நல்ல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வளர்ச்சி பெற்ற 200 நாடுகளுக்கும்
இந்திய நாட்டின் பெருமையை எடுத்துச் சென்றிருக்கிற பெருமை அவரை
சேர்ந்திருக்கிறது.   3 வது முறையாக நரேந்திர மோடி நாட்டினுடைய பிரதமராக வரவேண்டும்.  இந்த நிலைப்பாட்டை தான் நாங்கள் எடுத்து இருக்கிறோம்.

பிரதமர் மோடி சென்னைக்கு வந்தாலும் சரி,  மதுரைக்கு வந்தாலும் சரி நான் வரவேற்கிற
இடத்தில் இருப்பேன்.  எங்களுடைய நோக்கம் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக
வரவேண்டும் என்பது தான்.   தற்காலிக தீர்ப்பாக தான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் இரட்டை இலை வழங்கப்பட்டது.  வழக்கு இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது.

நாங்கள் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.  சென்னை சிவில் நீதிமன்றத்தில் இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.  அதன் தீர்ப்பு தான் இறுதி தீர்ப்பு என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.  பாஜக உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது." என்றார்.

இதனைத் தொடர்ந்து,  பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

"இரட்டை இலை சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்காக நிலுவையில்
உள்ளது.  தேர்தல் அறிவிப்பு வருகிற பொழுது தேர்தல் ஆணையம் என்ன முடிவு
எடுக்கிறார்கள்,  சிவில் நீதிமன்றத்தில் வரக்கூடிய தீர்ப்பை பொறுத்து தான் இருக்கிறது. "

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement