Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மோடியின் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்பேன்" - நிதிஷ் குமார் பேச்சு!

02:47 PM Jun 07, 2024 IST | Web Editor
Advertisement

நாங்கள் அனைவரும் பிரதமருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (ஜூன் 7) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் பாஜக, தெலுங்கு தேசம், ஜேடியு, ஜேடிஎஸ் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்பிக்களும் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.   இதனை ராஜ்நாத் சிங் முன்மொழிய அமித்ஷா வழிமொழிந்தார்.

தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் பேசுகையில்,  "அடுத்த முறையும் எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காது.  அவர்கள் நாட்டிற்காக எதையும் செய்யவில்லை.  பீகாரில் நிலுவைவில் உள்ள அனைத்துப் பணிகளும் செய்து முடிக்கப்படும்.

நாங்கள் அனைவரும் பிரதமருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம்.  நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பிரதமராக பதவியேற்கவுள்ளீர்கள்.  ஆனால் நீங்கள் அதை இன்றே செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்.  நரேந்திர மோடியின் ஆட்சியை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.  நரேந்திர மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்" என்று தெரிவித்தார்.

Tags :
BJPElection2024ElectionResultsElectionResults2024Lok Sabha Election2024Narendra modi
Advertisement
Next Article