For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Annapoorna விவகாரம் : "பிரச்னையை முடிக்க விரும்புகிறோம்" - அன்னபூர்ணா நிர்வாகம் அறிக்கை!

08:51 PM Sep 14, 2024 IST | Web Editor
 annapoorna விவகாரம்    பிரச்னையை முடிக்க விரும்புகிறோம்    அன்னபூர்ணா நிர்வாகம் அறிக்கை
Advertisement

ஜிஎஸ்டி குறித்து பேசியது தொடர்பான விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக அன்னபூர்ணா நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டம் கடந்த செப். 11-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து சரமாரிக் கேள்விகளை எழுப்பினார். இது பெரும் விவாதத்தை உண்டாக்கியது. அவர் கேள்வி கேட்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் மன்னிப்பு கோரினார். நிதியமைச்சரிடம் அவர் நேரில் மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதையடுத்து வணிகர்களுக்கு மிஞ்சியது அவமானம் மட்டுமே என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அன்னபூர்ணா உணவக நிர்வாகம் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்று பட்டாசு வெடிப்பு – டெல்லி போலீசார் வழக்குப்பதிவு!

அதில் பதிவிட்டுள்ளதாவது :

"செப்டம்பர் 11ம் தேதி நிதியமைச்சர் உடனான உரையாடல் வைரலானதால் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அன்னபூர்ணா உரிமையாளர் அவரை சந்தித்தார். இந்த தனிப்பட்ட சந்திப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது தவறான புரிதலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கோரியுள்ளது. வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு நன்றி. தேவையற்ற அனுமானங்கள், தவறான அரசியல் புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தை முடித்துவிட்டு வழக்கமான பணியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு ஆதரவு அளித்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement