Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“முடிந்தவரை முயற்சித்தோம்” - தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்...

07:29 AM Nov 20, 2023 IST | Web Editor
Advertisement

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இறுதிப்போட்டியல் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து  கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலியாவிடம் தோற்று நழுவ விட்டது. குறிப்பாக லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 10 வெற்றிகளை பெற்ற இந்திய அணியில் அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருந்ததால் இம்முறை வெற்றி உறுதி என்று ரசிகர்கள் நம்பினர்.

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் 47, விராட் கோலி 54, ராகுல் 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 241 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 134, லபுஸ்ஷேன் 58 ரன்கள் எடுத்ததால் 43 ஓவரிலேயே எளிதாக வென்றது.

இதையடுத்து,  ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக இல்லை, இந்த நாள் சிறப்பானதாக அமையவில்லை நாங்கள் முடிந்தவரை முயற்சித்தோம் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இறுதிப்போட்டியல் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article