”திண்டுக்கல் பூட்டால் திமுக ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும்” - நயினார் நாகேந்திரன் பேச்சு.!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜகவின் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,
”350பொருட்களின் விலையை குறைத்து நவராத்திரி நாளில் மிக அற்புதமான விலை குறைப்பை கொடுத்துள்ளார் பிரதமர். தமிழகத்தில் மனிதப்புனிதராக எம்ஜிஆர் இருந்தார். திமுக எம்ஜிஆர் இருக்கும் வரை ஆட்சிக்கு வர முடியாமல் போனது. இப்போது 4 வருடமாக மக்கள் விரோத அரசாக உள்ளது.
வெளிநாட்டுக்கு செல்வதையே முதல்வர் குறிக்கோளாக கொண்டுள்ளார். ஆனால் மக்கள் மீது அக்கறை இல்லை. கள்ளச்சாராயம் குடித்து இந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுத்த மோசமான அரசு. 5 நாட்களில் 15 வன்கொடுமைகள் நடந்துள்ளன. சிறைச்சாலை மரணங்களுக்கு சாரி சொல்லும் முதல்வராக நமது முதல்வர் உள்ளார்
சட்டம் ஒழுங்கு சீர்குலைய ஸ்டாலினே காரணம். பாஜக சுவரொட்டிகள் ஒட்டினால் கூட காவல்துறை வந்துவிடுவார்கள். ஆனால் ஆளும்கட்சி முதல்வர் வரும் போது கைக்கட்டி நிற்கிறார்கள். 2026 ல் இபிஎஸ் தலைமையிலான ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என அன்பான வேண்டுகோளை பாஜகவினரிடம் கேட்டுக்கொள்கிறேன். பிரதமரே போட்டியிடுகிறார் என நினைத்து பணி செய்ய வேண்டும்.
யார் தலைவர் யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல. நமக்கு ஒரே தலைவர் மோடி என நினைத்து பணி செய்ய வேண்டும். திண்டுக்கல்லுக்கு புகழ்பெற்ற பூட்டை கொண்டு இந்த ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும்” என்று பேசினார்.