For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே" - அமைச்சர் கே.என். நேரு பேட்டி

விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லை என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
06:08 PM Jul 05, 2025 IST | Web Editor
விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லை என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
 விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே    அமைச்சர் கே என்  நேரு பேட்டி
Advertisement

திருநெல்வேலியில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,

Advertisement

"ஒவ்வொரு கட்சியினரும் அவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை பணிகளாக மேற்கொள்வார்கள். திமுகவை ஆட்சியில் இருந்து நீக்குவதற்கு எந்த முகத்திரமும் இல்லை. திமுக கூட்டணி தான் வலுவாக உள்ளது. அதிமுகவின் கூட்டணி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. கூட்டணி ஆட்சியா தனி ஆட்சியா என்பதே அவர்கள் கூட்டணியில் பெரும் பிரச்னையாக உள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரச்னையில் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார், திமுக களத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள் : “குற்றங்களின் கூடாரங்களாக பள்ளிக்கூடங்களே மாறி வருவது கொடூரமானது” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவை நீக்குவோம் என சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது தான். அதிமுக - பாஜக கூட்டணி சரியாக இல்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பு யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் வெற்றி பெற வேண்டுமே, நாங்கள்தான் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தார். தொடர்ந்து, தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒருபோதும் திமுகவுடன் கூட்டணி இல்லை என விஜய் பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "தமிழக வெற்றி கழகத்தை நாங்கள் கூப்பிடவே இல்லையே" என பதிலளித்தார்.

Tags :
Advertisement