Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“விவிபாட் இயந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும்..!” - தேர்தல் ஆணையத்துக்கு காங். கடிதம்

10:27 AM Jan 03, 2024 IST | Jeni
Advertisement

வாக்களித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் விவிபாட் இயந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி I.N.D.I.A. கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பதாகவும்,  அதனால் புதிய நடைமுறைகள் தேவை என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இது தொடர்பான கேள்விகளை தேர்தல் ஆணையத்திடம் எழுப்பி உள்ளதாகவும், இந்தியா கூட்டணி பிரதிநிதிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், விவிபாட் இயந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையருக்கு காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படியுங்கள் : கட்டுமான நிறுவனங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு...!

விவிபாட் இயந்திரம் குறித்த கருத்துக்களை முன்வைக்க இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என அவர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.  விவிபாட் இயந்திரத்தின் நம்பகத்தன்மை மற்றும் சந்தேகங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Tags :
CongressDiscussionElectionCommissionJairamRameshLetterVVPAT
Advertisement
Next Article