Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநரிடம் தெரிவித்தோம்” -இபிஎஸ்

01:02 PM Mar 10, 2024 IST | Web Editor
Advertisement

“போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநரிடம் தெரிவித்தோம்” என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்த பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார்.  

Advertisement

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஆர்.என்.ரவியை, எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

அப்போது போதைப்பொருள் தடுப்பு தொடர்பான புகார் மனுவை கவர்னர் ஆர்.என். ரவியிடம், அவர் வழங்கினார் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு என்றும் சமீபத்தில் பறிமுதலான போதைப்பொருட்களின் விவரங்கள் குறித்த பட்டியலையும் கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் , அ.தி.மு.க.வின் கே.பி. முனுசாமி , வேலுமணி , திண்டுக்கல் சீனிவாசன் , தங்கமணி ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து கவர்னர் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கவர்னரிடம் தெரிவித்தோம்.தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் மக்கள் வாழ்க்கை சீரழியும் .இளைஞர்கள் , மாணவர்கள் போதைப்பொருளால் பாதிக்கப்படுகின்றனர். இது நீடித்தால் வரும் 7 ஆண்டுகளில் தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இருக்கும்.

போதைப்பொருள் கடத்தி வந்த பணத்தை உதயநிதி டிரஸ்டுக்கு ஜாபர் சாதிக் தந்துள்ளார்.போதைப்பொருள் கடத்திய பணத்தில்தான் திமுக தேர்தலை சந்திப்பதாக செய்திகள் வருகின்றன.போதைப்பொருள் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் செயல்பாடு சந்தேகத்திற்கிடமாக உள்ளது. என தெரிவித்தார்.

https://www.facebook.com/news7tamil/videos/938333461273357/

 

Tags :
ADMKAIADMKDMKedappadi palaniswamiNarcoticsRN RaviTn governorTN Govt
Advertisement
Next Article