"தவெக மாநாட்டில் நாங்கள் எந்த இடையூறும் செய்யவில்லை" - அமைச்சர் மூர்த்தி பேட்டி!
தவெக மாநாட்டில் திமுக தொண்டர்கள் எந்த ஒரு இடையூறும் செய்யவில்லை என்று அமைச்சர் மூர்த்தி பதில் அளித்துள்ளார்.
12:28 PM Aug 22, 2025 IST
|
Web Editor
Advertisement
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பேருந்து நிலையத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தவெக மாநாட்டிற்கு தாங்கள் ஒரு துளி கூட இடையூறு செய்யவில்லை.
Advertisement
எந்த ஒரு திமுக தொண்டனும் அதுபோன்ற சில்லித்தனமான வேலைகளில் ஈடுபடுவது இல்லை. ஆதவ் அர்ஜுன் வேண்டுமென்றே இது போன்ற அவதூறுகளை எங்கள் மீது பரப்பி உள்ளதாக கூறினார். நேற்று நடைபெற்ற தவெக மாநாட்டிற்கு மாவட்ட நிர்வாகத்தில் இருந்தும் தங்களுடைய பகுதியில் இருந்தும் எந்த ஒரு இடையூறும் செய்யவில்லை என தெரிவித்தார்.
Next Article