For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“உங்களுக்கு வீடு தர முடியாது...” - கர்நாடகாவில் அரங்கேறிய சாதிய பாகுபாடு!

09:55 AM Dec 18, 2023 IST | Jeni
“உங்களுக்கு வீடு தர முடியாது   ”   கர்நாடகாவில் அரங்கேறிய சாதிய பாகுபாடு
Advertisement

கர்நாடகாவில் சாதியை காரணம் காட்டி தூய்மைப் பணியாளர்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கர்நாகா மாநிலத்தில் உடுப்பி சிஎம்சியில் இருந்து பைந்தூருக்கு டிசம்பர் 1-ம் தேதி, 25-க்கும் மேற்பட்ட கோரகா பழங்குடியினத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.  இதனால் பைந்தூருக்கு அவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.  அங்கு, சாதியை காரணம் காட்டி, அவர்களுக்கு வீடு வாடகைக்கு தர மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் வாடகைக்கு வீடு வழங்கிய உரிமையாளர்களும்,  சாதியின் பெயர் தெரிந்தவுடன் கோரகா பழங்குடியினத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை வெளியேறும்படி கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதனால், பணியை முன்னிட்டு அவர்கள் உடுப்பியிலிருந்து பைந்தூருக்கு ரூ.100 செலவழித்து, 70 கிலோ மீட்டர் தூரம் தினமும் பயணித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : விருதுநகரிலும் அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு..!

இந்த பிரச்னை குறித்து பேசிய உடுப்பி துணை ஆணையர் வித்யாகுமாரி,  பைந்தூரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தங்குமிடங்களில்,  கோரகா பழங்குடியினத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களைத் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement