“சுடச் சுட ரெடி பண்ணிட்டு இருக்கோம்” - ‘குட் பேட் அக்லி’ அப்டேட் பகிர்ந்த ஜி.வி பிரகாஷ்!
விடா முயற்சி படத்திற்கு பிறகு அஜித் குமார் – திரிஷா மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மைத்திரி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. தொடர்ந்து சமீபத்தில் திரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது. அதன்படி அவர் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து படத்தின் டீசர் கடந்த மாதம் இறுதியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் மாமே, சுடச் சுட ரெடி பண்ணிட்டு இருக்கோம்” என்றார்.