"அடுத்த ஆண்டு மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப உள்ளோம்" - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
ககன்யான் திட்டம் மூலம் 2025 ஆம் ஆண்டு மனிதர்கள் விண்ணிற்கு அனுப்ப உள்ளோம். அதற்கு தேவையான செயல்பாடுகள் இந்த ஆண்டு செய்ய உள்ளோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் எக்ஸ்போ சாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி58, ஆந்திர மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.10 மணி அளவில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு, சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
புத்தாண்டு தொடங்கியது. எக்ஸ்போசாட் வெற்றிகரமாக விண்ணில் நிர்ணயிக்கப்பட்ட சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கருந்துளைகள், நியூட்ரான் பற்றி ஆராய பிரத்யேக செயற்கைக்கோளை கொண்ட 2-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள் : மிக்ஜாம் புயல் – வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான தகவல்!
பி.எஸ்.எல்.வி- சி -58 ராக்கெட் பூமியிலிருந்து 650 கி.மீ புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டள்ள நிலையில், பிரபஞ்சம் பற்றிய தகவல்களை தரும் செயற்கைக்கோளாக இந்த ராக்கெட்டில் இடம் பெற்றுள்ளன. மாணவிகள் தயாரித்த `வெசாட்' என்ற செயற்கைகோளும் விண்ணில் ஏவப்படவுள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது மிகவும் தனித்துவம் வாய்ந்த செயற்கைக்கோள் ஆகும்.
மேலும்,ககன்யான் திட்டம் மூலம் 2025 ஆம் ஆண்டு மனிதர்கள் விண்ணிற்கு அனுப்ப உள்ளோம் அதற்கு தேவையான செயல்பாடுகள் இந்த ஆண்டு செய்ய உள்ளோம்.
இவ்வாறு இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.