“நாம் என்றும் மக்கள் பக்கம், மக்கள் என்றும் நம் பக்கம்!” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
நாம் என்றும் மக்கள் பக்கம், மக்கள் என்றும் நம் பக்கம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டடம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 4) திறந்து வைத்தார். இதற்காக நேற்று மாலை சென்னையிலிருந்து செந்தூர் விரைவு ரயிலில் முதல்வர் பயணம் செய்து மயிலாடுதுறைக்குச் சென்றார். ஆட்சியர் அலுவலகத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து தற்போது சமூக வலைதளத்தில் (எக்ஸ்) பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், நானும் ஒரு டெல்டாகாரன் என்ற பாச உணர்வோடு மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்ட மக்களுக்கான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தேன். சிலர் போல, தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள் அல்ல நாங்கள். எப்போதும் எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு மக்களோடு அவர்களின் உரிமைகளுக்காக நிற்பவர்கள்! நாம் என்றும் மக்கள் பக்கம்! மக்கள் என்றும் நம் பக்கம். திராவிட மாடல் எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
நானும் ஒரு டெல்டாகாரன் என்ற பாச உணர்வோடு மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்ட மக்களுக்கான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தேன்.
சிலர் போல, தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள் அல்ல நாங்கள். எப்போதும் எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு மக்களோடு அவர்களின் உரிமைகளுக்காக நிற்பவர்கள்!
நாம்… pic.twitter.com/Iuy9akMRCB
— M.K.Stalin (@mkstalin) March 4, 2024