Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சிரமத்திற்கு வருந்துகிறோம்!” - எல்ஐசி தளம் மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றம்!

07:30 PM Nov 19, 2024 IST | Web Editor
Advertisement

எல்ஐசி இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் முதன்மை மொழியாக இந்தி மாற்றப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் மீண்டும் ஆங்கில மொழியிலும் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டது.

Advertisement

எல்ஐசி தளத்தில் ஹிந்தி மொழியில் மட்டுமே அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளதால் மக்கள் எல்ஐசி தளத்தை பயன்படுத்த முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். முன்னதாக, எல்ஐசி இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் முதன்மை மொழியாக இந்தி மாற்றப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இன்று(நவ. 19) கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், எல்ஐசி தளத்தில் முதன்மை மொழி, இந்தியிலிருந்து ஆங்கிலத்துக்கு மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மொழி மாற்றம் குறித்து எல்ஐசி தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘எங்களுடைய கார்ப்பரேட் வலைதளத்தில் licindia.in மொழி மாற்றம் செய்யும் பக்கங்கள் தொழில்நுட்பக் கோளாறுகளால் செயல்படவில்லை. இந்த பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது. இப்போது எல்ஐசி வலைதளம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. சிரமத்திற்கு நாங்கள் மிகுந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Tags :
hindiissueLICnews7 tamilwebsite
Advertisement
Next Article