கோடையில் கண்களை பாதுகாப்பதற்கான வழிகள்!
12:10 PM May 07, 2024 IST | Web Editor
Advertisement
கோடையில் கண்களை பாதுகாக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
Advertisement
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.
கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது. அதன்படி, உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெயில் அதிகமாக இருப்பதால் சூரியக்கதிர்கள் கண்களை பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், கோடையில் கண்களை பாதுகாக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
- சூரிய கதிர்வீச்சால் ஈரப்பதம் குறைந்து கண்களில் காயம் ஏற்பட்டு நாளடைவில் பார்வை குறைபாடு உட்பட பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
- வெளியில் செல்லும் போது தரமான கருப்பு கண்ணாடி அணியலாம்.
- வெளியே சென்று வந்தவுடன் கண்களை சுத்தமான நீரால் கழுவுவது நல்லது.
- வெளியே செல்லாம் இருந்தாலும், ஏசி அறையில் இருந்தாலும் கண்களை அடிக்கடி கழுவுவது சிறந்தது.
- கண்களை கைகளை கொண்டு அழுத்தாமல் இருப்பது நல்லது.
- இது தவிர் கம்ப்யூட்டர், செல்போன் போன்றவற்றை தொடர்ந்து பார்ப்பதை தவிர்த்து, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களை மூடி தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்கலாம்.
- நீச்சல் குளத்தில் குளிக்கும் போது குளோரின் கலந்த நீர் கண்களில் படாமல் இருக்க கண்ணாடி அணிவது அவசியம்.
- வெயில் காலத்தில் சிகரெட் பிடிப்பது கண்களை மேலும் வறண்டதாக மாற்றிவிடும்.
- காண்டாக்ட் லென்ஸ் வைக்கும் போதும், அகற்றும் போதும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- வெயில் காலத்தில் கண்களை கவனிக்காமல் விட்டால், பார்வை குறைபாடு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
- பழங்கள், மோர், இளநீர் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு உடலையும், கண்களையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது சிறந்தது.