மாநில அளவிலான கால்பந்து போட்டி - தேனி FFC கிளப் அணி முதலிடம்...!
வத்தலக்குண்டு அரசு பள்ளி மைதானத்தில் நடந்த 18வது ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் தேனி FFC கால்பந்து கிளப் அணி முதல் பரிசு பெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ராயல்
கால்பந்து குழு சார்பில் சுழற்கோப்பைக்கான 18 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஐவர்
கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டி கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த கால்பந்து போட்டியில் சென்னை, திருச்சி, கோயமுத்தூர், மதுரை, தேனி, காரைக்குடி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 30 அணிகள் பங்கேற்றன.
இதையும் படியுங்கள் ; கொ.ம.தே.க மாநாட்டில் 16,000 பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மியாட்டம் – கின்னஸ் சாதனை!
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தேனி FFC அணியினரும், வத்தலகுண்டு
AVMS அணியினரும், திண்டுக்கல் KFC அணியினரும், சிவகங்கை SFC அணியினரும் மோதின. இதில் தேனி FFC அணியினரும், வத்தலகுண்டு AVMS இரு அணிகளும் மோதியதில் (4-1) என்ற கோல் கணக்கில் தேனி FFC அணி முதல் இடத்தை பிடித்து பரிசை வென்றது. வத்தலகுண்டு AVMS அணி இரண்டாவது இடத்தைப் பிடித்து பரிசை வென்றது.
முதல் இடம் பிடித்த தேனி FFC கால்பந்து கிளப் அணிக்கு ரூ. 30,000 பரிசு தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த வத்தலகுண்டு AVMS கால்பந்து கிளப் அணிக்கு ரூ. 20,000 பரிசு தொகை வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த திண்டுக்கல் KFC கால்பந்து கிளப் அணிக்கு ரூ. 10000 பரிசு தொகை வழங்கப்பட்டது. நான்காம் இடம் பிடித்த சிவகங்கை SFC கால்பந்து கிளப் அணிக்கு ரூ. 5000 பரிசு தொகை வழங்கப்பட்டது.
கால்பந்தாட்ட போட்டியை காண சுற்றியுள்ள கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான
இளைஞர்கள் வந்திருந்தனர். மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சிறுவர் மற்றும்
இளைஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.