For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

செண்பகத்தோப்பு அணை மற்றும் மிருகண்டாநதி அணையில் இன்று நீர்திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செண்பகத் தோப்பு மற்றும் மிருகண்டாநதி அணைகளில் இருந்து இன்று நீர்திறப்பு...
10:25 AM May 03, 2025 IST | Web Editor
செண்பகத்தோப்பு அணை மற்றும் மிருகண்டாநதி அணையில் இன்று நீர்திறப்பு
Advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செண்பகத் தோப்பு மற்றும் மிருகண்டாநதி அணைகளில் இருந்து விவசாயிகளின் பாசன வசதிக்காக இன்று முதல் 18.05.25 வரை 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

Advertisement

செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி நீரும் ,மிருகண்டாநதி அணையில் இருந்து வினாடிக்கு 120 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. செண்பகத்தோப்பு அணை நீர் மூலம் 8350 ஏக்கர் விவசாய நிலமும், மிருகண்டாநதி அணை நீர் மூலம் 3190 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுவதாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement