Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு!

03:37 PM Jul 28, 2024 IST | Web Editor
Advertisement

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை மதியம் 3 மணிக்கு திறக்கப்படுள்ளது. 

Advertisement

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பின. அணைகளுக்கு 1.48 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணைக்கு இதன் காரணமாக கடந்த 17 ம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. தற்போதைய நிலையில் அணை நீர்மட்டம் 109.20 அடியாகவும் நீர்இருப்பு 77.30 டி.எம்.சி., ஆகவும் உள்ளது. காவிரியில் நீர் வரத்து மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணை திறந்து விடுவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பிறகு, மாலை 3:00 மணிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்.

இதன்படி அமைச்சர் நேரு அணையை திறந்து வைத்தார். முதற்கட்டமாக 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும்.வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறந்து வைக்கப்படுகிறது. இதனையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags :
Cauvery River KN NehruMettur dam
Advertisement
Next Article