For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நெல்லை மக்களுக்கு அறிவுறுத்தல்! மணிமுத்தாறு அணை நிரம்பி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறப்பு!” - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

04:04 PM Dec 23, 2023 IST | Web Editor
“நெல்லை மக்களுக்கு அறிவுறுத்தல்  மணிமுத்தாறு அணை நிரம்பி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறப்பு ”   மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Advertisement

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் 1,500 முதல் 2,000 கன அடி வரை தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுவதாகவும், கரையோர மக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Advertisement

தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன.  பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள்,  குளங்கள் நிரம்பி வழிகின்றன.

இதே போன்று நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் தொடர் மழை வெள்ளத்தால் ஆற்றாங்கரை தெரு, மூங்கிலடி, கீழப்பத்தை, மேலப்பத்தை, கலுங்கடி, பத்மநேரி, புலியூர்குறிச்சி, மாவடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தது. இதுமட்டுமல்லாது பல கிராமங்கள் தனித்தீவுகளாக மாறிய நிலையில், மொத்தமாக வெள்ள நீர் சூழ்ந்து மின்சாரம், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்தனர்.

இந்நிலையில், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் பல்வேறு தரப்பினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெள்ள நீர் வடியவடிய மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை எட்டியுள்ளதால், உபரி நீர் 1500 முதல் 2000 கன அடி வரை தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நேற்று முதல் மழை ஏதுமில்லை என்றும், வெள்ள அபாயம் எதுவும் தற்போது இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆயினும் பொதுமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags :
Advertisement