சு.வெங்கடேசனின் ‘வேள்பாரி’ 3 பாகங்களாக உருவாகும்! இயக்குநர் ஷங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்...
இந்தியன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் “வேள் பாரி” சரித்திர நாவலை 3 பாகமாக எடுக்க போவதாக ஒரு புதிய அப்டேட் ஒன்றை கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் வேள்பாரி மன்னன் சரித்திர கதையை படமாக எடுக்கப் போவதாக ஷங்கர் அறிவித்துள்ளார்.
இது குறித்து ஷங்கர் அளித்துள்ள பேட்டியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பியும், முக்கிய எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி சரித்திர நாவலை கொரோனா சமயத்தில் படித்தேன். என்னை மிகவும் ஈர்த்தது உடனடியாக திரைக்கதையாக உருவாக்கினேன். அதை மூன்று பாகங்களாக படமாக எடுக்க திட்டமிட்டு உள்ளேன். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை.
நான் ரசிகர்கள் பார்வையில் இருந்தே கதை மற்றும் காட்சிகளை உருவாக்குகிறேன். ஆஸ்கர் விருதை எதிர்பார்க்கவில்லை. இந்தியன் 2 படைப்பிடிப்பை நடத்திய போது இரண்டு பாகங்களுக்கான கதை அதுக்குள்ள இருந்தது அவற்றை வெட்டி ஏறிய மனம் இல்லாமல் இந்தியன் 3 பாகத்தை உருவாக்கினோம். இந்தியன் 4 பார்க்கும் எடுக்கும் திட்டம் இல்லை.
கதாபாத்திரத்திற்க்காக கமல்ஹாசன் 70 நாட்கள் மேக்கப் போட்டு நடித்த சில பிரச்சனைகள் மத்தியில் கஷ்டப்பட்டு படத்தை முடித்தோம். எனது முதல்வன். அந்நியன். உட்பட பல படங்களின் கிளை மார்க் காட்சிகள் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் தொடர்ச்சியாகவே முடிந்து இருக்கும். ஆனால் அவற்றின் அடுத்த பாகங்கள் எடுப்பது குறித்து ஆலோசிக்கவில்லை என்றார்.