நாண்டெட் மக்களவைத் தொகுதியில் EVMல் முறைகேடு நடந்ததா? - உண்மை என்ன?
This News Fact Checked by ‘Telugu Post’
நாண்டெட் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் முடிவுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலாக பரவியது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக கட்சி தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டி வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியும் குற்றம்சாட்டியுள்ளது. மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த மகாவிகாஸ் அகாதி தலைவர்கள் அனைவரும் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் காரணம் என குற்றம் சாட்டினர். 288 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் மகாயுதி 235 இடங்களை கைப்பற்றியது. மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு வெறும் 46 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இந்த தோல்விக்காக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார்.
இதன் ஒருபகுதியாக மகாராஷ்டிராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கசிந்துள்ளதாக வாட்ஸ்அப் பதிவுகள் வைரலாகி வருகின்றன. மகாராஷ்டிராவில் மீண்டும் பிக் பிரேக்கிங் இவிஎம்களில் மோசடி அம்பலமானது * நான்டெட் மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என பரவும் வைரல் செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை இங்கே காணலாம்
உண்மைச் சரிபார்ப்பு:
சமூக வலைதளங்களில் வைரலான பதிவுகளை ஆய்வு செய்ததில் உண்மை இல்லை என்பதை கண்டறிய முடிந்தது. தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி Google தேடல் செய்தோம். நான்டெட் மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர சவான் 1,457 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சாந்துக்ரவ் ஹம்பார்டேவை விட வெற்றி பெற்றார். சவானுக்கு 5,86,788 வாக்குகளும், ஹம்பர்டே 5,85,331 வாக்குகளும் பெற்றனர். சவான் வசந்த ராவ் பல்வந்த ராவின் மரணம் காரணமாக இந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
நாந்தேட் மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர சவான் பாஜகவின் சாந்துக்ரவ் ஹம்பார்டேவை விட 1457 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். சவான் 586788 வாக்குகளையும், ஹம்பர்டே 585331 வாக்குகளையும் பெற்றதாகவும் அவர் அறிவிப்புகளை வெளியிட்டார். காங்கிரஸ் எம்பி வசந்த் சவான் ஆகஸ்ட் 26ஆம் தேதி மரணமடைந்ததை அடுத்து இடைத்தேர்தல் அவரது மகன் ரவீந்திர சவான் போட்டியிட்டார். இதனை பல ஊடக நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.
அவற்றை இங்கேயும் இங்கேயும் பார்க்கலாம் .
மக்களவையில் நடந்த முறைகேடுகள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆயினும் எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஊடக அறிக்கைகளும் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிர மாநிலம், நாந்தேடில் உள்ள மாவட்ட நிர்வாகத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 75 விவிபேட் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டன. அதிகாரிகள் கூறியது போல் வாக்கு எண்ணிக்கையில் எந்த வித்தியாசமும் இல்லை என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பிடிஐ) உறுதி செய்துள்ளது.அதன் கட்டுரையை இங்கே காணலாம் .
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்கு எண்ணிக்கை மற்றும் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்டத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஐந்து மையங்களில் இருந்து EVMகளில் பெறப்பட்ட வேட்பாளர் வாரியான வாக்குகள் VVPATகள் மூலம் எண்ணப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள 75 மையங்கள், 30 மக்களவை மற்றும் 45 சட்டசபை மையங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தவறின்றி நடந்ததாக மாவட்ட ஆட்சியர் அபிஜித் ரவுத் தெரிவித்தார். டிசம்பர் 9 அன்று, எகனாமிக் டைம்ஸ் இணையதளத்திலும் இது தொடர்பான கட்டுரையைப் காண முடிந்தது. மேலும், எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவிஎம்களில் பதிவான வாக்குகள் தொடர்பாக 75 விவிபேட் இயந்திரங்களை எண்ணுவதில் எந்த வித்தியாசமும் இல்லை என மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் உள்ள மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்கு எண்ணிக்கை மற்றும் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்டத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஐந்து மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெறப்பட்ட வேட்பாளர் வாரியான வாக்குகள் விவிபேட்கள் மூலம் எண்ணப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
மாவட்டத்தில் உள்ள 75 மையங்கள், 30 லோக்சபா மற்றும் 45 சட்டசபை மையங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பிழையின்றி நடந்ததாக மாவட்ட ஆட்சியர் அபிஜித் ரவுத் தெரிவித்தார். வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் சீட்டு குலுக்கி மையங்கள் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் நான்டெட் தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக பல ஊடக நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. அந்த வீடியோக்களை இங்கே பார்க்கலாம்.
முடிவு :
நாண்டெட் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் முடிவுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலாக பரவியது. இதுகுறித்து உண்மைச்சரிபார்ப்பில் ஈடுபட்டபோது வைரலான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பது நிரூபணமாகிறது.
Note : This story was originally published by ‘Telugu Post’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.