உக்ரைனுக்கு இங்கிலாந்து பிரதமர் ஆதரவளித்ததால் லண்டனில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றதா? - வைரல் கூற்று உண்மையா?
This News Fact Checked by ‘Newsmeter’
மார்ச் 1 அன்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பின் போது, ரஷ்யாவுடனான போரில் எதிராக உக்ரைனுக்கு தனது ஆதரவை வழங்குவதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், பெண்கள் புர்கா அணிந்து தெருக்களில் அணிவகுப்பாக செல்லும் ஊர்வலத்தின் காணொலி, 'லண்டனின் தற்போதைய நிலைமையை' காட்டுகிறது என்ற கூற்றுடன் வைரலாகி வருகிறது. "கெய்ர் ஸ்டார்மர்: 'எந்த விலை கொடுத்தாவது உக்ரைனின் எல்லைகளை நாங்கள் பாதுகாப்போம்!" என்ற சொன்ன பிறகு லண்டன் மாநகரில் போராட்டம் வெடித்ததாக வைரலான கூற்றில் தெரிவிக்கப்பட்டது.
இந்த காணொளியை இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், இதுதான் தற்போதைய லண்டன்!" ( காப்பகம் ) என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.
உக்ரைன் தொடர்பான பிரதமரின் அறிக்கையை ஆதரித்து மக்கள் தெருக்களில் இறங்கியதாக பயனர் கூறுகிறாரா அல்லது அதை எதிர்த்ததாக கூறுகிறாரா என தெரியவில்லை. இதேபோன்ற கூற்றை முன்வைக்கும் ஒரு பதிவை இங்கே காணலாம் .
உண்மைச் சரிபார்ப்பு :
இந்தக் கூற்று தவறானது என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டின் பழைய காணொலி, உக்ரைன் பற்றிய பேரணிகளுடன் தொடர்புடையது அல்ல. வீடியோவின் கீஃப்ரேம்களின் கூகுள் ரிவர்ஸ் தேடலைப் பயன்படுத்தி தேடியபோது, செப்டம்பர் 17, 2021 தேதியிட்ட ஒரு பேஸ்புக் கணக்கில் வைரலான வீடியோவைக் கண்டறிந்தோம். அதன்படி வீடியோவின் தலைப்பு, வீடியோவில் உள்ள சம்பவம் 'ஆஷுரா ஊர்வலம் 2021 லண்டன்'-ல் நடந்ததாகக் கூறுகிறது.
இதனை குறிப்பாக எடுத்துக்கொண்டு முக்கிய வார்த்தை பயன்படுத்தி தேடியபோது 'சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ஆஷுரா தினத்தன்று லண்டனில் ஏராளமான மக்கள் அணிவகுப்பாக செல்கின்றனர்' என்ற தலைப்பிலான YouTube வீடியோவை காண முடிந்தது. இந்த வீடியோ ஆகஸ்ட் 30, 2020 அன்று பதிவேற்றப்பட்டது.
லண்டனில் 2021 ஆஷுரா ஊர்வலம் தொடர்பான காணொலிகளை இங்கே மற்றும் இங்கே கண்டோம். பேரணியின் இடம் மற்றும் சூழலைச் சுருக்கமாக விளக்க உதவிய ஒரு YouTube காணொலியை கண்டோம். இது 'ஹிஜ்ரி 1443, 2021 முஹர்ரம் மாதத்திற்கான லண்டனில் உள்ள ஹுசைனி கவுன்சிலின் ஊர்வலம்' என்ற தலைப்பில் இந்த காணொளி ஆகஸ்ட் 27, 2021 அன்று பதிவேற்றப்பட்டது.
காணொலியின் விளக்கத்தில் "இந்த ஆண்டு ஆஷுரா தினத்தன்று லண்டனில் உள்ள ஹுசைனி சங்கத்தின் ஊர்வலம் : ஹிஜ்ரி 1443/கி.பி 2021." என எழுதப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 16, 2021 அன்று பதிவேற்றப்பட்ட ஆஷுரா அணிவகுப்பிற்கான பாதை வரைபடத்தைக் காட்டும் தி ஹுசைனி அசோசியேஷனின் இன்ஸ்டாகிராம் கணக்கை நாங்கள் கண்டோம்.
கூகிள் மேப்ஸைப் பயன்படுத்தி, வைரல் வீடியோவில் உள்ள பதாகைகள் ஜூன் 2021 முதல் ஸ்ட்ரீட் வியூவில் காணக்கூடிய இடத்தைக் கண்டறிந்தோம் இந்த பதாகைகள் ஜனவரி 2021 மற்றும் ஜூன் 2022 பதிப்புகளில் ஸ்ட்ரீட் வியூவில் இருந்த அதே இடத்தை காட்டியது. இதன் மூலம் வைரலான காணொலி 2021 இல் படமாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.
2021 ஆம் ஆண்டில் வைரலான வீடியோவில் உள்ள பதாகைகள் மற்றும் கூகுள் ஸ்ட்ரீட் வியூ படங்களின் ஒப்பீட்டை கீழே காணலாம்.
Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.