For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிரியா கிளர்ச்சியாளர்களால் குர்திஷ் பெண் தூக்கிச் செல்லப்பட்டாரா? - வைரலாகும் வீடியோ தற்போதையதுதானா?

01:18 PM Dec 18, 2024 IST | Web Editor
சிரியா கிளர்ச்சியாளர்களால் குர்திஷ் பெண் தூக்கிச் செல்லப்பட்டாரா    வைரலாகும் வீடியோ தற்போதையதுதானா
Advertisement

This news Fact Checked by ‘India Today

Advertisement

சிரிய கிளர்ச்சியாளரகளால் குர்திஷ் பெண் தூக்கிச் செல்லப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இது தொடர்பான உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.

சிரியாவில் சமீபத்தில் அரசுக்கும் கிளர்ச்சியாளரகளுக்கு நடைபெற்ற தாக்குதலில் பல முக்கிய நகரங்கள் கிளர்ச்சியாளரகளின் கைவசம் சென்றன. இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபரான பஷார் அல் ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடியதாக தகவல் வெளியானது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்  டிசம்பர் 8 அன்று தலைநகர் டமாஸ்கஸில் அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் செயல்பட்டு வரும் முக்கிய பத்திரிகையான Middle East Eye பத்திரிகை ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் மற்றும் துருக்கி ஆதரவு சிரிய தேசிய இராணுவம் உள்ளிட்ட கிளர்ச்சிக் குழுக்களால் அந்நாடு கைப்பற்றப்பட்ட பின்னர், சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவிலிருந்து பல்லாயிரக்கணக்கான சிரிய குர்துகள் வெளியேறியதாக தெரிவித்தது.

இந்த நிலையில் முகமூடி அணிந்த ஆண் ஒருவர் ஒரு பெண்ணை தனது கைகளில் சுமந்து செல்லும்  வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.  அந்த நபர் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பைச் சார்ந்தவர் என்றும், அந்த பெண் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஊழியர் என்றும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

அந்த வீடியோவைக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் , "பிரேக்கிங் | தஹ்ரிர் அல்-ஷாமின் பயங்கரவாதிகளில் ஒருவர், குர்திஷ் பெண்ணை தூக்கிச் செல்கிறார். இந்த பயங்கரவாதிகள் லா இலாஹ எனும் மந்திரத்தை ஓதிவிட்டு வெளியே வருகிறார்கள். இது இஸ்லாமா?" என பதிவிடப்பட்டுள்ளது. இப்பதிவில் இணைப்பை இங்கே காணலாம் . இந்தியா டுடே நடத்திய ஆய்வில் வைரலாகும் காணொலி சிரியாவில் தற்போது நடந்தது அல்ல எனவும், 2019 முதல் நடந்தது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பெண் ஒரு குர்திஷ் போராளி ஆவார், அவர் சிரியாவில் துருக்கி ஆதரவுப் படைகளால் கைப்பற்றப்பட்டார்.

சிரிய தேசிய ராணுவம் மற்றும் குர்திஷ் படைகள் நீண்ட காலமாக ஒருவருக்கொருவர்  சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சிரிய - குர்திஷ் போராளிகளை பயங்கரவாதிகளாக துருக்கி கருதுகிறது. சிரிய குர்துகள் மீது துருக்கி ஆதரவு கிளர்ச்சிப் படைகள் போர்க்குற்றங்கள் செய்ததாகவும் செய்திகள் உள்ளன . சிரிய அதிபரான ஆசாத் ஆட்சியைக் கவிழ்க்க சிரிய தேசிய இராணுவமும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமும் ஒரு கூட்டணியாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்திய தாக்குதலில் எந்த ஈடுபாடும் இல்லை என்ற கூற்றை துருக்கி நிராகரித்தாலும் , துருக்கி ஆதரவு போராளிகள் அதில் பங்கேற்றதாக குர்திஷ் படை கூறுகிறது

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் தலைகீழ் படத் தேடலின் உதவியுடன், Rudaw English என்ற செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட X இடுகையில் வைரலான வீடியோவைக் கண்டோம். குர்திஷ் பெண் போராளி சிசெக் கோபேன் என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டது. துருக்கி ஆதரவு போராளிகளால் அவர் உயிருடன் பிடிக்கப்பட்டதாக அப்பதிவில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 26, 2019 தேதியிட்ட வீடியோ அறிக்கையின்படி, கோபேன் குர்திஷ் பெண்கள் பாதுகாப்புப் பிரிவில் உறுப்பினராக இருந்தார். கோபானை காப்பாற்ற சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று அந்த குழு கோரிக்கை விடுத்திருந்தது .

துருக்கிய செய்தி நிறுவனமான டிஆர்டி வேர்ல்ட் அக்டோபர் 2019 இல் இந்த சம்பவம் குறித்த 
வெளியிட்ட வீடியோ அறிக்கையில், சிரியாவில் உள்ள அய்ன் இசாவில் பெண் பிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டது. இந்த அறிக்கையில் கோபானின் தனி கிளிப் உள்ளது, அதில் TRT வேர்ல்ட் -ன் படி, அவர் படைகளால் நன்றாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் துருக்கிய பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை ஏற்பாடு செய்ததாக கோபனே மீது குற்றம் சாட்டப்பட்டது. மார்ச் 2021 இல், கொலை முயற்சி உட்பட பல குற்றச்சாட்டுகளில் துருக்கிய நீதிமன்றத்தால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்று குர்திஷ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த சம்பவம் சமீபத்தியது அல்ல, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலானது என்பது தெளிவாகிறது.

முடிவு :

சிரிய கிளர்ச்சியாளரகளால் குர்திஷ் பெண் தூக்கிச் செல்லப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. வைரலான வீடியோவில் உள்ள பெண் குர்திஷ் போராளி என்றும் அது தற்போதையது அல்ல ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வீடியோ என்றும் உறுதியாகியுள்ளது. இவை சமீபத்தியது போன்று தவறான கூற்றுடன் பகிரப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘India Today and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement