தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் கோழி மற்றும் மது விநியோகிக்கப்பட்டதா? உண்மையில் நடந்தது என்ன?
This News is Fact Checked by ‘Fact Crescendo‘
மக்களவை தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், பரப்புரையின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் கோழி மற்றும் மது விநியோகிக்கப்பட்டதா? உண்மையில் நடந்தது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பலத்தை வெளிப்படுத்தி, பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், தேர்தல் பிரசாரத்துடன் வாக்காளர்களை கவரவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக அரசியல் கட்சியினர் பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் ஒரு தலைவர் சிலருக்கு மதுபானம் மற்றும் உயிருள்ள கோழிகளை விநியோகம் செய்வதைக் காணலாம். அதோடு“ தற்போதைய மக்களவைத் தேர்தலின் போது, காங்கிரஸ் தலைவரால் மக்களுக்கு மது மற்றும் கோழிக்கறி விநியோகம் செய்யப்பட்டது. " எனவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் 25-ஆம் தேதி (25.04.2024) தேதியிட்ட பதிவொன்று சமூக ஊடக பயனர்களால் பகிரப்பட்டு வருகிறது. அந்த பதிவில், " தற்போதைய மக்களவைத் தேர்தலின் போது, காங்கிரஸ் தலைவர் ஒருவரால் மக்களுக்கு மது மற்றும் கோழிக்கறி விநியோகம் செய்யப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
உண்மைச் சரிபார்ப்பு:
மேலே உள்ள பதிவில் கூறப்பட்ட உரிமைகோரல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டியது அவசியம் என்பதைக் கண்டறிந்து, Fact Crescendo விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
முதலில் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடியதில் பல முடிவுகள் கிடைத்தன.
மேற்குறிப்பிட்ட முடிவுகளிலிருந்து வைரலான வீடியோ சமீபத்தியது அல்ல என்பதைக் குறிக்கும் சில ஊடக அறிக்கைகளைக் கண்டோம். அக்டோபர் 5, 2022 அன்று வெளியிடப்பட்ட டெய்லி ட்ரிப்யூன் படி , டிஆர்எஸ் தலைவர் 'தேசியக் கட்சி தொடங்கப்பட்டதைக் கொண்டாட நேரடி கோழி மற்றும் மதுபானங்களை விநியோகிக்கிறார்'.
அக்டோபர் 4, 2022 அன்று வெளியிடப்பட்ட ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி . தெலுங்கானா முதல்வர், தேசிய அரசியலில் நுழைவது குறித்து புதன்கிழமை 'விஜயதசமி' அன்று அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இதை கொண்டாடும் வகையில், டிஆர்எஸ் தலைவர் ராஜ்னாலா ஸ்ரீஹரி, உள்ளூர் மக்களுக்கு மது பாட்டில்கள் மற்றும் கோழிக்கறிகளை வழங்குவதைக் காண முடிந்தது.
முடிவு:
எங்கள் பார்வையில், மேலே உள்ள பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தக் காணொளி பழையது என்பதால் , சமீபத்திய மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வீடியோ தவறான உரிமைகோரல்களுடன் தற்போது பகிரப்படுகிறது.
Note : This story was originally published by ‘Fact Crescendo‘ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective…