போர் பதற்றம் - நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைப்பு!
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி இமாசலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் நடைபெறவுள்ள பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று(மே.09) அதே மைதானத்தில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது, இந்த போட்டி போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு, பொது மக்கள் பத்திரமாக மைதானத்தை விட்டு வெளியில் அனுப்பப்பட்டனர். போர் பதற்றத்திற்கு மத்தியில் இதுவரை ஐபிஎல் தொடரில் 57 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று(மே.09) நடைபெற்றதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே போர் பதற்றம் காரணாம பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியானது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.