போர் பதற்றம் எதிரொலி - 32 விமான நிலையங்கள் மூடல்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என இந்திய பாதுகாப்பு படை தெரிவித்தது. ஆனால் இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்ததாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இது இரு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றத்தை அதிகரித்தது. இச்சூழலில் கடந்த இரண்டு நாட்களாக இரு நாடுகளுக்கிடையேயான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள 32 விமான நிலையங்கள் வருகிற 15-ம் தேதி காலை 5.29 மணி வரை மூடப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, அதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபோர், பதிந்தா, பூஜ், பிகானேர், சந்திகர், ஹல்வாரா, ஹிண்டான், ஜெய்சல்மேர், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், கண்ட்லா, காங்க்ரா, கேஷோட், கிஷங்கட், குலு-மணாலி, லே, லூதியானா, முண்ட்ரா, நாலியா, பாதான்கோட், பட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட், சர்ஸாவா, ஷிம்லா, ஸ்ரிநகர், தோய்ஸ், உத்தர்லை ஆகியவை. இந்த விமான நிலையங்களில் அனைத்து சிவில் விமான நடவடிக்கைகளும் இந்த காலகட்டத்தில் நிறுத்தப்படுகிறது.