அரசின் திட்டங்களில் இணைய விருப்பமா? QR CODE-யை அறிமுகம் செய்த எழும்பூர் எம்எல்ஏ!
எழும்பூரில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்யவும், மக்களின் குறைகளைக் கேட்டறியவும் வீடு வீடாக சென்று சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் தலைமையிலான குழுவினர் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவினர் வீடு வீடாகச் சென்று முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசு செயல்படுத்திவரும் நலத்திட்ட உதவிகள் அடங்கிய கையேடு வழங்குகிறார்கள்.
அதோடு, திமுக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம்,
முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை போன்ற உதவிகள் கிடைக்கிறதா? என்பதை உறுதி செய்கிறார்கள்.
இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டிற்காக ஒன்றுபட்டு போராடுவோம்” – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!
அதனுடன், சுய உதவிக் குழுவில் சேர்ந்திருக்கிறார்களா அல்லது சேர
விரும்புகிறார்களா? என்றும் சிறு தொழில் தொடங்குவதற்கு விருப்பம்
இருக்கிறதா என்பதையும் கேட்டு அறிகிறார்கள். அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்திட்டங்கள்,
பிற்படுத்தப்பட்டோருக்கான உதவிகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு
கொடுக்கப்படுகிறது.
மேலும், மக்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்காக சட்டமன்ற உறுப்பினரை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையிலான QR CODE-ஐ உருவாக்கி, வீடு தோறும் ஒட்டி வருகின்றனர். இதன்மூலம் மக்கள் நேரடியாக சட்டமன்ற உறுப்பினரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.