For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தளபதி விஜய் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் வேணாமா?” - வைரலாகும் வெங்கட் பிரபுவின் பதிவு!

09:44 PM Jun 21, 2024 IST | Web Editor
 தளபதி விஜய் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் வேணாமா ”   வைரலாகும் வெங்கட் பிரபுவின் பதிவு
Advertisement

'கோட்' படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். 

Advertisement

லியோ படத்தைத் தொடர்ந்து விஜயின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.  இதில் நடிகர்கள் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரசாந்த்,  வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே விஜய் பாடிய முதல் பாடல் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.  இதனையடுத்து இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.  இந்நிலையில், இந்த படத்தின் 2-ஆவது பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.  இப்பாடல் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் 2வது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில் அதன் புரோமோவை படக்குழு வெளியிட்டது.  இந்த நிலையில்,  'கோட்' படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.  அதன்படி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,  "தளபதி விஜய் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் வேணாமா?. அனைவரையும் இரவு 12.01க்கு சந்திக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement