For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் - விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

05:50 PM Mar 31, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்    விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம்! வெளியிட்டுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து பிரதான கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 27-ம் தேதி முடிந்த நிலையில், வேட்புமனு பரிசீலினையும் நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து மார்ச்  28-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இந்த சூழலில், நேற்று வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றது.

இந்நிலையில் தொகுதிவாரியாக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் 135 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும் 76 பெண்களும் போட்டியிடுகின்றனர்.  

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு கட்சிகளுக்கு இடையே  நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  அதன்படி கரூர் தொகுதியில் அதிகபட்சமாக ஒரு வாக்குச்சாவடியில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளது. அதேபோல குறைந்தபட்சமாக 9 வேட்பாளர்கள் கொண்ட நாகை உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஒரே ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும்.

வடசென்னை, தென் சென்னை, கோவை, திருச்சி, உட்பட 5 தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். அதேபோல மத்திய சென்னை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 24 தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement