Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழ்நாட்டிலும் வாக்காளர் திருத்தப்பட்டியல் அவசியம்" - தமிழிசை சௌந்தரராஜன்!

தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, கிட்னி திருட்டு அனைத்திலும் திமுகவினருக்கு பங்கு இருக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
12:22 PM Jul 26, 2025 IST | Web Editor
தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, கிட்னி திருட்டு அனைத்திலும் திமுகவினருக்கு பங்கு இருக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Advertisement

தூத்துக்குடி செல்வதற்காக சென்னை வந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "4300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். தென்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனுடையதாக இந்த விரிவாக்கம் இருக்கும்.

Advertisement

கங்கைகொண்ட சோழபுரம் மூலம் கங்கைக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய இணைப்பு இருந்தது என்பதை ராஜராஜசோழன் அன்றே உறுதிப்படுத்தி இருக்கிறார். அதை இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்படுத்துகிறார். இதுதான் நமது நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை.

ஆனால் தமிழகத்தில் பிரிவினைப் பேசி ஒற்றுமைக்கு மிகப் பெரிய பாதகம் ஏற்படும் அளவிற்கு பல குரல்கள் எழுகிறது, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெரிய புராணம் தான் அதிகப்படியாக பேச வேண்டும், பெரியார் புராணம் அல்ல ஏனென்றால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நீர் மேலாண்மை இருந்திருக்கிறது,
விவசாயம் இருந்திருக்கிறது. நமது சோழ மன்னர்கள் ஆன்மீகத்தோடு தான் சேனை வளர்த்தார்கள் அதனால் தான் காவி தமிழ் தான் அதிகமாக வளர்க்கப்பட்டது என நான் கூறினேன்.

இன்று முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் சோழ ஏரிக்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி வந்த பிறகுதான் கங்கைகொண்ட சோழபுரத்திற்கான கவனமே திரும்பி உள்ளது என்பது தான் ஆச்சரியமான ஒன்று. தமிழக முதலமைச்சர் சந்திப்பதை விட தமிழகத்தை பற்றி பிரதமர் அதிகமாக சிந்திக்கிறார். 38 மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் நீரழிவு நோய்க்கான டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் ஒரு லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ளது, அதோடு 1200 கோடி ரூபாய் தமிழகத்தில் உள்ள மருத்துவ திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் தம்பி வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெறுகிறார். இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் வெளிநாடு செல்வார்கள் அப்படி இல்லை என்றால் தனியார் மையத்திற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் பாரத பிரதமர் அரசு மருத்துவமனைக்கு சென்று தான் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.

மரியாதைக்குரிய சுகாதாரத்துறை அமைச்சர் கிட்னி திருட்டு எல்லாம் நடக்கவில்லை, இது ஒரு முறைகேடு எனக் கூறுகிறார். நமது வீட்டிற்கு திருடன் வந்து விட்டால் திருட்டு எல்லாம் நடக்கவில்லை ஏதோ முறைகேடாக எடுத்துச் சென்று விட்டான் என கூறுவோமா. அந்த மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை லைசென்ஸ் ரத்து செய்து விட்டோம் என கூறுவது மட்டுமல்ல, இதில் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்தவர்கள் பங்கெடுத்துள்ளார்கள்.

பீகாரில் நடந்து கொண்டிருக்கும் சீர்திருத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது முறைகேடு எனக் கூறுகிறார்கள் இங்கு கிட்னி திருட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளாக இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக வீர நடை போடுகிற பிரதமராக நமது பிரதமர் இருக்கிறார். இன்று ஜாதி வாரி கணக்கெடுப்பு நாம் நடத்துகிறோம்.

இதுபோல்தான் 15 வருடத்திற்கு முன்பு ஏற்படுத்தி இருக்க வேண்டிய வளர்ச்சியை நீங்கள் ஏற்படுத்தவில்லை என்பது என்னுடைய கருத்து. தி நகர் பகுதியில் மட்டும் 20 ஆயிரம் வாக்காளர்கள் இல்லை தேர்தல் நடக்கும் பொழுது. தம்பி அண்ணாமலையின் தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் இல்லை என கூறினார்கள். அதனால் கண்டிப்பாக வாக்காளர் திருத்தம் தமிழகத்திலும் இருக்க வேண்டும். முறைகேடான வாக்காளர் பட்டியல் தமிழகத்திலும் நீக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Tags :
BJPChennaiairportmodiPressMeetRevisiontamil nadutamilisai soundararajanVoter List
Advertisement
Next Article