’வாக்காளர் பட்டியல் முறைகேடு’- பெங்களூருவில் ராகுல்காந்தி பேரணி அறிவிப்பு!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அதில், கர்நாடகாவில் நடந்த மக்களவைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். போலி வாக்காளர் பட்டியல், வெவ்வேறு குடும்பத்தினருக்கு ஒரே விலாசம் போன்ற முறைகேடுகள் மூலம் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் வாக்காளர் பட்டியலில் இல்லாத விலாசங்களில் பலரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன மற்றும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த பல வாக்காளர்களுக்கு ஒரே விலாசம் பதிவு செய்யப்பட்டுள்ளது போன்ற அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன் வைத்து அதிரவைத்தார். மேலும் அவர், ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையடுத்து, கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா ராகுல் காந்திக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களுடன் வந்து தன்னை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பியும் மக்களவை எதிர்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளை கண்டித்து பெங்களூருவில் உள்ள சுதந்திரதின பூங்காவில் போராட்டம் நடத்த உள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி கர்நாடக தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு பேரணியாகச் செல்ல உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கர் நாடக காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்