For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொளத்தூர் தொகுதியிலும் வாக்குதிருட்டு - நயினார் நாகேந்திரன்!

கொளத்தூர் தொகுதியில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
02:19 PM Sep 08, 2025 IST | Web Editor
கொளத்தூர் தொகுதியில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கொளத்தூர் தொகுதியிலும் வாக்குதிருட்டு   நயினார் நாகேந்திரன்
Advertisement

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசியது,

Advertisement

”அதிமுக கட்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதைத் தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். டெல்லி தலைமையோடு பேசி அனைவரையும் ஒன்றிணைக்க ஒரு முடிவு எடுக்கப்படும். 2001-ல் நடந்த தேர்தலில் என் போன்றவர்கள் மேலே வந்ததில் டிடிவி தினகரனுக்கு முக்கிய பங்கு உண்டு. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது. தொடர்ந்து எங்களோடு இருப்பார்கள் என்று பலமுறை கூறியிருக்கிறேன். பலமுறை டிடிவி தினகரனோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.

அப்பொழுது எல்லாம் கூட்டணி தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் திடீரென்று நயினார் தான் காரணம் என்று கூறுகிறார். நயினார் நாகேந்திரன் செயல்பாடுகளால் தான் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம், நயினார் நாகேந்திரன் அகங்காரத்தில் செயல்படுகிறார் என்று எதன் அடிப்படையில்
கூறுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. திருநெல்வேலி பாஷையில் கூற வேண்டும் என்றால், எனக்கு விளங்கல.

கொளத்தூர் தொகுதியில் 9000 ஓட்டு திருட்டு நடைபெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அது தொடர்பாகத நாங்கள் ஆய்வு செய்ய உள்ளோம்”

என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement