ஐஸ்லாந்து | மீண்டும் வெடித்து சிதறி எரிமலை - ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!
ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 4வது முறையாக வெடித்துள்ளது.
ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன. அதில் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது அந்த எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறின. இது சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருப்பு குழம்புகளாக ஓடியது.
இதையும் படியுங்கள் : பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் 44 புறநகர் ரயில்கள் இன்று ரத்து!
இதற்கிடையே அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்களிடையே பதற்றம் அடைந்தனர். இப்பகுதியில் சுமார் 3800 மக்கள் வசித்து வருவதாகவும் பாதுகாப்பு கருதி, அவர்கள் ஏற்கனவே அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதால் எரிமலை குழம்பால் அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 4-வது முறையாக எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக 2010 ஆம் ஆண்டில், ஐஸ்லாந்தின் தெற்கில் உள்ள Eyafjallajokull எரிமலை வெடித்த நிலையில், அப்பகுதிகளில் பெரிய அளவில் சாம்பல் பரவியது. சுமார் 1,00,000 விமானங்களை தரையிறக்கியது குறிப்படத்தக்கது.