For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

VJS 50: வெளியானது "மகாராஜா” திரைப்படத்தின் 2வது டிரைலர்!

09:19 PM Jun 11, 2024 IST | Web Editor
vjs 50  வெளியானது  மகாராஜா” திரைப்படத்தின் 2வது டிரைலர்
Advertisement

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மகாராஜா’  திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனைத்தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக ‘மகாராஜா’ திரைப்டம் உருவானது. குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்’ போஸ்டர், சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஒரு சலூனுக்குள் ஆழ்ந்த சிந்தனையில் காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்துள்ள அந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. இதனிடையே  சமீபத்தில் ‘மகாராஜா’  திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

மகாராஜா திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த டிரைலர் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement