மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைப்பெற்ற ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி!
சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில், நேற்று வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைப்பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் இந்து மக்களால் ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்நாட்களில் அனைத்து தொழில் நிறுவனங்களிலும், வீடுகளிலும், வணிக வளாகங்களிலும் பக்தர்கள் வழிபாடு மேற்கொள்வர். ஆயுத பூஜை அன்று தொழிலுக்கு உதவும் உபகரணங்களுக்கு பட்டையடித்து, பூஜைகள் மேற்கொள்வர். மறுநாளான விஜயசதமி, புதிதாக தொழில் தொடங்குவோருக்கு, கல்வி பயில ஆரம்பிப்போருக்கு சிறந்த நாள் எனும் ஐதீகம் உள்ளது.
விஜயதசமி நன்னாளில் கோயில்களில் குழந்தைகளுக்கு அரிசியில் எழுத கற்பித்தால், அவர்கள் சிறப்பாக படிப்பார்கள் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உள்ளது. இதனால் விஜயதசமியன்று, கோயில்களில் குழந்தைகளை அரிசியில் எழுத வைப்பர். அந்த வகையில் நேற்று நாடு முழுவதும் உள்ள கோயில்களில் குழந்தைகளை அரிசியில் எழுதவைத்து பெற்றோர்கள் ரசித்தனர்.
சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் சார்பில் ஆண்டுதோறும் ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு கோயிலின் அருகில் உள்ள மண்டபத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்துகொண்டு, தங்கள் குழந்தைகளை பெரியவர்கள் மடியில் அமர வைத்து, அரிசியில் 'அ ' என்ற எழுத்தை எழுத கற்பித்தனர்.
மேலும் சிலர் குழந்தைகளின் விரலை பிடித்து, ‘ஹரி ஸ்ரீ கணபதியே நமஹா’ எனவும்,
பச்சரிசியில் ஓம் என்றும், அம்மா, அப்பா என்றும் எழுத வைத்தனர்.