Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘தெலங்கானா, கர்நாடகா, கேரளாவில் விசிக போட்டி’ - திருமாவளவன் அறிவிப்பு!

03:50 PM Mar 05, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் தெலங்கானா, கர்நாடகா, கேரளாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அதன் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Advertisement

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  மேலும் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.  மேலும் வேட்பாளர் பட்டியலையும் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில்,  விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"தெலங்கானாவில் 10 தொகுதிகளிலும்,  கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும்,  கேரளாவில் இடுக்கி உட்பட 3 தொகுதிகளிலும் விசிக போட்டியிடும்.  மேலும் ஆந்திராவில் போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

Tags :
Election2024KarnatakaKeralaParlimentary ElectionTelanganathirumavalavanVCK
Advertisement
Next Article